தமிழகத்தில் மதுரை, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 4ஆம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மதுரை, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்ஷியஸ் ஒட்டியிருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.