Categories
உலக செய்திகள்

“ஒரே ஒரு டோஸ் போதும்”… கொரோனா போயிடும்…. பிரபல நாடு வெளியிட்ட தகவல்..!!

உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் பிரிட்டனில் தடுப்பூசியில் ஒரு டோஸ்  செலுத்தினாலே போதும் 90% பாதிப்பை நீக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்கு மேல் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம். கொரோனாவுக்காக ஒவ்வொரு நாடும்  தடுப்பூசி கண்டுபிடிப்பதில்  முழு முயற்சியுடன் ஈடுபட்டு கண்டுபிடித்து வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டனில் கொரோனா தொற்றிற்கு செலுத்தப்படும் தடுப்பு மருந்துகளில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரியவருகிறது.

புதிய ஆய்வில் பைசர்  மற்றும் ஆக்ஸ்போர்ட்/ ஆஸ்ட்ரோஜநேகா  தடுப்பூசி செலுத்துவதில் ஒற்றை டோஸ் செலுத்தினாலே 90% பாதுகாப்பு கிடைப்பதாக அறிவித்துள்ளது. மேலும் பிரிட்டனில் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, 32 மில்லியன் பிரிட்டானியர்களுக்கு  முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

40 முதல் 49 வயது உடையவர்களுக்கு இரண்டாவது கட்டத்திலும், அதை தொடர்ந்து 30 முதல் 39 வரை உடையவர்களுக்கும் ,பிறகு 18 முதல் 29 வயது உடையவர்களுக்கு  தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது . NHS தலைமையின் கீழ் கிட்டத்தட்ட நாடு முழுவதும் 2500 தடுப்பு மையங்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |