தமிழகத்தில் இரண்டாவது நாளாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திரு ராகுல் காந்தி நெல்லையில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரண்டாவது நாளான இன்று நெல்லையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கல்வி என்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என்பதை தான் நம்ப மாட்டேன் என்றும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறினார். கல்வி முறையில் ஒரு கொள்கைகளை வகுப்பதற்கு முன்பு மாணவர்களிடமும்,
ஆசிரிய பெருமக்களிடமும் கலந்துரையாட வேண்டும் என்று குறிப்பிட்ட ராகுல்காந்தி, ஆனால் இவை நடப்பதே இல்லை எனத் தெரிவித்தார். இதை தொடர்ந்து நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில், திரு ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தார். பூரண கும்ப மரியாதையுடன் திருநாள் காந்தி, கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கோயிலுக்கு வெளியே காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு மேளம் முழங்க முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.