Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ”…. சிறுமியின் மீது ஒருதலைக் காதல்…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது…!!

16 வயது சிறுமியிடம் திருமணம் செய்ய வற்புறுத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் அருகே கமுதியைச் சேர்ந்தவர் கோகுல் (28 வயது). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஒருதலையாக காதல் செய்து வந்துள்ளார். மேலும் அந்த சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு சம்மதம் தெரிவிக்காத அந்த சிறுமிக்கு கோகுல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அந்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |