கடலூர் மாவட்டத்தில் கமல் படம் பொறிக்கப்பட்ட டீ-ஷர்ட்டுகள் மற்றும் டிபன் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் பெரிய காட்டு பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படைகள் டீ ஷர்ட்டுகள், டிபன் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் படம் பொறிக்கப்பட்ட டீ-ஷர்ட்டுகள் மற்றும் டிபன் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்