Categories
மாநில செய்திகள்

சபாநாயகர் பதவி ராஜினாமா… சூடுபிடிக்கும் அரசியல் களம்… அடுத்த பரபரப்பு…!!!

புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து தன் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதன் பிறகு புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த உள்துறை அமைச்சகத்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்தார்.

இதனையடுத்து புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி பதவியை ராஜினாமா செய்ததால், புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுப்பியுள்ளார். மேலும் மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் சபாநாயகரின் சகோதரர் ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

Categories

Tech |