இந்தியாவிலேயே தொழில்துறையில் தமிழகம் மிகச் சிறந்த மாநிலமாக திகழ்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6- ம் தேதி நடக்க இருக்கிறது. இதனால் தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன்படி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தனது 3வது கட்ட பிரச்சாரத்தை தென்மாவட்டங்களில் தொடங்கியுள்ளார்.
மேலும் கன்னியாகுமரி மாவட்டம் சர்ச் ரோடு பகுதியில் பிரச்சாரத்தின் போது அவர் பேசினார். அப்போது அவர் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை அடிமைப்படுத்த நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென்றும் தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் தனித்தன்மையை பாதுகாக்க வேண்டியது தமது கடமை என்றும் கூறினார்.
அதன்பிறகு அகத்தீஸ்வரம் சென்று மறைந்த எம்.பி. வசந்தகுமாரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு வசந்தகுமாரின் மனைவி மற்றும் குடும்பத்தினரை ஆரத் தழுவி ஆறுதல் தெரிவித்தார் . பிரச்சாரத்தை முடித்தபிறகு அவர் சாலையோரக் கடையில்நின்று நுங்கு ,சர்பத் ,போன்ற பானங்களை பருகினார்.