இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆளுமையின் உருவமாக கருதப்பட்டவர். சுதந்திரம் அடைந்த பின் இந்திய அரசியல் சாசனத்தை தொகுப்பு குழுவில் முக்கிய பங்கினை ஆற்றியவர். இவர் ஒரு மிகச்சிறந்த ஆளுநர், அரசியல்வாதி என்பதனையும் தாண்டி இவர் ஒரு மிகச்சிறந்த போராளி என்று கூறலாம். இந்திய சுதந்திர போராட்டத்தில் இவரது பங்கு என்பது முற்றிலும் பாராட்டத்தக்கது. டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் பீகார் மாநிலத்தில் உள்ள சுதன் மாவட்டத்தில் சரடே என்னும் கிராமத்தில் டிசம்பர் 3 1884 ஆம் ஆண்டு மகாவீரசாகி மற்றும் கமலேஸ்வரி என்ற தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
சிறுவயதில் தனது பெற்றோர்கள் மற்றும் நண்பர்களால் ராஜன் என்று அழைக்கப்பட்டார். டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவருடைய இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். டாக்டர் ராஜேந்திர பிரசாத் தனது 12ஆம் வயதில் ராஜவம்சதேவி என்ற பெண்ணை மணந்தார். பிறகு சிறப்பான இல்லற வாழ்வினை மேற்கொண்டார். ராஜேந்திர பிரசாத் தனது தொடக்கக் கல்வியை சப்ரா என்ற மாவட்டத்தில் படித்து முடித்தார். இவரது பெற்றோர்கள் ராஜேந்திரபிரசாத் குழந்தையாக இருக்கும்போது பிரசியம், இந்தி மற்றும் கணிதம் போன்றவற்றிற்கு தனித்தனியே ஆசிரியர்களே ஏற்பாடு செய்து படிக்க ஏற்பாடு செய்தார்கள்.
1907 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை பொறியியல் பிரிவினைத் தேர்ந்தெடுத்து படித்தார். பின்பு முதுநிலைப் படிப்பில் முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றார். பிறகு பல கல்லூரிகளில் பேராசிரியர்கள் மற்றும் முதல்வராகப் பணியாற்றி உள்ளார். அவர் பணியாற்றி கொண்டிருக்கும் போதே அவர் சட்டம் படித்தார். தங்கப் பதக்கத்துடன் முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்தார். பிறகு சட்டத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றார். சட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு அவர் வழக்கறிஞர் பதவி ஏற்று பல வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றுள்ளார்.
அவரது வைத்த திறமை அவர் ஒரு சிறந்த பேச்சாளர் மற்றும் சொற்பொழிவாளராக மாற்றியது. பிறகு அவர் மக்களுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தார். சிறிது காலம் கழித்து காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர் வழி பற்றி தான் செய்து வந்த வழக்கறிஞர் பதவியை துறந்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பின் பல போராட்டங்களில் கலந்து கொண்ட இவர் மக்களுக்காக தனது குரலினை உயர்த்தினார். 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ராஜேந்திர பிரசாத்தும் ஒருவர்.
இவர் மூன்று ஆண்டுகள் கழித்து 1945 ஆம் ஆண்டு அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவின் அரசியல் அமைப்பு குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அரசியலமைப்பு குழுவில் தனது சிறப்பான பங்கினை அளித்தார். மேலும் 1950ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். 1952 மற்றும் 1957ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை குடியரசு தலைவராக பதவி வகித்தார்.
இவர் ஒருவர் மட்டுமே இன்று வரை இரண்டு முறை குடியரசுத் தலைவராக இருந்துள்ளார். 1962ஆம் ஆண்டு பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இவருக்கு இந்திய அரசு இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது அளித்து சிறப்பித்துள்ளது. ஓய்வு பெற்ற சில மாதங்களிலேயே அவரது உடல்நிலை மோசமானது. தொடர்ந்து நோய்வாய்ப்பட்டார். பின்பு பிப்ரவரி 28 1963 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். சிறந்த ஆளுமை திறனை தன்வசம் வைத்திருந்த அவரை இழந்ததால் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.