Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி ஸ்டாலின் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்… வெளியான சூப்பர் தகவல்…!!!

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்  நடித்து வரும் படத்தில் பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேன்டா ,கண்ணே கலைமானே ,நிமிர் ,சைக்கோ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் அடுத்ததாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார்.

Arav (Tamil Bigg Boss) Height, Weight, Age, Girlfriend, Biography & More »  StarsUnfolded

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஆரவ் ராஜபீமா ,மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |