பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மோடி இந்தியாவை டிஜிட்டல் மயமாக ஆக்குவதற்காக பல்வேறு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். திட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். மேலும் நாட்டு மக்களிடையே வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் வானொலி மூலமாக மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் உரையாடுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று நிகழ்ச்சியில் உரையாடும்போது, “தமிழ் ஒரு அழகிய மொழி என்றும், தொன்மையான மொழி என்றும் கூறியுள்ளார். ஆனால் தான் பல காலங்களாக தமிழை பயின்றும் இன்று வரையிலும் தமிழை கற்க முடியவில்லை என்ற வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழின் ஆழத்தை பற்றி பலரும் கூறும்போது தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஆசையாக இருக்கிறது என்றும் ஆனால் முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.