Categories
தேசிய செய்திகள்

மார்ச் 1 முதல் 5ஆம் தேதி வரை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தங்க பத்திர விற்பனை மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 2020-2021 ஆம் நிதியாண்டுக்கான 11ஆவது கட்ட தங்க பத்திர விற்பனை பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி 5 ஆம் தேதி வரை நடந்தது. இதில் தங்கப் பாத்திரத்தில் விலை கிராமுக்கு ரூ.4,912 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தின சராசரி விலையை அடிப்படையாக வைத்தே இந்த நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் தங்க பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்த டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் ஒரு கிராமுக்கு ஐம்பது ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2020-2021 ஆம் நிதியாண்டுக்கான 12வது கட்ட தங்க பத்திர விற்பனை மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தங்க பத்திரத்தின் விலை கிராம் ரூ.4,662 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தின சராசரி விலையை அடிப்படையாக வைத்தே இந்த நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்க பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்த டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |