சாலையோரம் நின்று கொண்டிருந்த வாலிபரை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகே கோபாலசமுத்திரத்திலுள்ள முனியசாமி தெருவில் நம்பியார் என்பவர் வசித்து வந்துள்ளார் இவரது மகன் கார்த்திக் கூலி வேலை பார்த்து வந்துள்ளார் .சம்பவத்தன்று கார்த்திக் கோபாலசமுத்திரம் சாலையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அரிவாளுடன் வந்த மர்ம நபர்கள் கார்த்தியை சரமாரியாக வெட்டியுள்ளனர் . அவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள கார்த்திக் சாலையில் ஓடியுள்ளார். ஆனாலும் மர்மநபர்கள் துரத்தி சென்று கார்த்திக்கை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது இதனைத்தொடர்ந்து சேரன்மகாதேவி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.