Categories
மாநில செய்திகள்

“ஒரே நாடு, ஒரே மொழி” என்று பேசும் மோடி…பெட்ரோல்,டீசல் விலையை பற்றி ஏன் பேச மறுக்கிறார்… ராகுல் காந்தி கேள்வி..!!

பெட்ரோல் டீசல் உயர்வை பற்றி ஏன் மோடி எதுவும் பேசாமல் உள்ளார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் மூன்றாவது கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி இன்று காலை நெல்லை பாளையங்கோட்டையில் ஒரு கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் நெல்லை டவுன் பகுதியில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று தரிசனம் பெற்றார். பிற்பகல் தென்காசி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது தேர்தலில் வெற்றி பெற்று வரும் அரசு மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வரலாறு என்று இந்தியாவை மாற்ற முயற்சிக்கும் மோடி பெட்ரோல் டீசல் விலை உயர்வை மற்றும் பேசாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |