சுவிட்சர்லாந்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்திக்கொண்ட 16 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் தற்போது வரை 5,55,000 மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 10,000 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் தயாரிப்புகளான பைசர் மற்றும் மாடர்னா போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகள் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 16 நபர்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவலை சுவிஸ் மெடிக் என்ற மருத்துவ கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ளது.
மேலும் தற்போது வரை 7,51,009 தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களில் 361 பேருக்கு எதிர் விளைவுகளையே ஏற்படுத்தியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதில் கடும் பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் 16 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் சராசரியாக 86 வயதுடையவர்கள். இது மட்டுமல்லாமல் சுமார் 95 நபர்களுக்கு கடும் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 16 நபர்களுக்கும் இதயம் மற்றும் நுரையீரல் தொடர்புடைய நோய்கள் இருந்தது தெரியவந்துள்ளது. எனினும் தடுப்பூசியால் தான் இவர்கள் இறந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் இல்லை என்று ஸ்விஸ்மெடிக் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.