டோல்கேட்டு பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மலைமேடு கிராமத்தில் அப்துல்ரஹீம் என்பவர் வசித்து வந்தார். இவர் வாலாஜா டோல்கேட்டில் இருக்கும் தனியார் நிறுவனம் வைத்திருக்கும் ஸ்டாலில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் வழக்கம்போல் நேற்று அதிகாலை வேலைக்கு வந்துள்ளார். அப்போது அவருடைய கைவிரல் அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருக்கும் சுவிட்ச் பாக்ஸ் மீது உரசியுள்ளது.
அந்த சுவிட்ச் பாக்ஸில் ஏற்கனவே மின்சாரம் பாய்ந்து இருந்ததால் அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வாலாஜா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.