கரூர் மாவட்டம் புலியூர் வெள்ளாளப்பட்டி யில் அங்கன்வாடி மையத்தில் வேலை செய்து வருபவர் சந்தியா(30). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பணிக்கு செல்லமுடியவில்லை என்று கூறப்படுகின்றது. ஆனால் அவருடைய மேல் அதிகாரி ஒருவர் சந்தியாவிடம் நீங்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் வழங்கப்படாது என்றும், வேலைபார்க்கும் அங்கன்வாடி மையம் மூடப்படும் என்றும் டார்ச்சர் கொடுத்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த சந்தியா தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் சந்தியா மேலதிகாரி பேசியவற்றை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.