முன்விரோதத்தால் பெண்ணை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைவிளாகம் பகுதியில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் கீதா தம்பதியினர். அதே பகுதியில் துரைராஜ் என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கும் பாலசுப்பிரமணிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று கீதாவை துரைராஜ் கைகளால் தாக்கி கொலை செய்வதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து கீதா முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் வழக்குப் பதிவு செய்து துரைராஜை கைது செய்துள்ளனர்.