Categories
அரசியல் தேசிய செய்திகள்

பங்கு விலக்கல்… 3 மடங்கு லாபம் ஈட்டிய பாஜக…ரூ3,25,00,000 இலக்கு..!!

பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அரசின் பங்குகளை விலக்கிக் கொள்வதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 3.25 லட்சம் கோடி ஈட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருந்த 2009-2014 காலகட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு விலக்கல் மூலம் 14.52 பில்லியன் டாலர்கள் ஈட்டியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் பங்கு விலக்கல் மூலம் 40.92 பில்லியன் டாலர்கள் ஈட்டப்பட்டு, மும்மடங்கு அதிகத் தொகை பங்கு விலக்கல் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகள் மேலும் விலக்கிக் கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Image result for பொதுத்துறை பங்கு விலக்கல்

அந்த வகையில் ONGC ,இந்தியன் ஆயில், உள்ளிட்ட பொது நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நடப்பு நிதி ஆண்டில் 3,25,000 கோடி ரூபாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் தவிர்த்து பெரிய அளவிலான அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூட்டிய பொதுத்துறைகளின்  பங்குகளை 40 சதவீதமாக குறைக்க திட்டம் தீட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Categories

Tech |