காய்கறி கடைக்காரர் ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கிணறு பகுதியில் சிவகுமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் காய்கறி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகியுள்ளார். ஆனால் அந்த சிறுமியின் குடும்பத்தினர் அதனை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சிவ குமரேசன் அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில், அவர் கர்ப்பமாகி விட்டார். அதன் பின் சிறுமியின் கர்ப்பத்தை அறிந்த அவரது பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவ குமரேசனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.