தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் நிரந்தரமாக்கபடுவார்கள் என ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் சென்னையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். குறைந்த கட்டணத்தில் இயங்கும் பேருந்துகள் கொண்டுவரப்படும். போக்குவரத்து தொழிலாளர்களின் பணப்பலன்கள் முறையாக வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் பல தொழில் நகரங்கள் நொடிந்து போனதற்கு ஜிஎஸ்டி தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.