நடிகர் தனுஷ் ஸ்ரீகாந்த் முக்கிய வேடத்தில் நடித்த “மிருகா” என்ற படத்தின் டிரைலரை சற்று முன் தனது ட்விட்டரில் வெளியிட்டார்.
ஸ்ரீகாந்த் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் கொலை செய்யும் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று முன் வெளியிட்டார். இந்த படத்தில் புலி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் டிரைலர் தற்போது வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி, தேவி வைஷ்ணவி உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இந்த படத்தை பார்த்திபன் இயக்கியுள்ளார், அருள் தேவ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் மார்ச் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.