Categories
மாநில செய்திகள்

BREAKING: கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு – அதிர்ச்சி அறிவிப்பு…!!

நாடு முழுவதும் தற்போது விலைவாசி உயர்வின் காரணமாக மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் போன்றவற்றின் விலையேற்றத்தால் சாமானிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது எல்லா வீடுகளிலும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  கொரோனா நெருக்கடி காலத்தில் எந்த ஒரு விலை ஏற்றமும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது விலைவாசி உயர்ந்து வருகிறது.

இதையடுத்து தற்போது சென்னையில் சிலிண்டரின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்து ரூ.835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 710 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை தற்போது மூன்றாவது முறையாக ரூபாய் 125 வரை உயர்ந்து ரூ.835 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |