Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இவன் மேல தான் சந்தேகமா இருக்கு…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறை…!!

சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விட்டனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள இருக்கன்குடி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாரியம்மன் கோவில் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் பூமி ராஜன் என்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

மேலும் அந்த வாலிபர் அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவரிடமிருந்த 9 மது பாட்டில்களையும், 160 ரூபாயையும் பறிமுதல் செய்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மது விற்பனை செய்த குற்றத்திற்காக பூமி ராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |