வேலை கிடைக்காததால் விரக்தியில் வாலிபர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அன்பர் தெருவில் சுரேஷ் என்ற டிப்ளமோ இன்ஜினியர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு செல்ல வேண்டும் என நினைத்து பல்வேறு இடங்களில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இவரது தகுதிக்கு ஏற்ற சரியான வேலை கிடைக்காததால் எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். மேலும் இவரது பெற்றோர் இவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் இவருக்கு ஏற்ற சரியான பெண்ணும் கிடைக்கவில்லை. இவ்வாறு திருமணமும் நடக்காமல், வேலையும் கிடைக்காமல் விரக்தியில் இருந்த சுரேஷ் தனது வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்து தற்கொலை செய்துள்ளார்.
அதன்பின் சுரேஷ் வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவனது பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது சுரேஷ் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.