Categories
லைப் ஸ்டைல்

இதயம் ஆரோக்கியமாக இருக்க… எளிய டிப்ஸ் இதோ…!!!

உங்களின் இதயம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க தினமும் தொடர்ந்து இதனை செய்து வந்தால் மட்டும் போதும்.

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

ஒவ்வொருவருக்கும் தங்களின் உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே ஒருவரால் உயிர் வாழ முடியும். அவ்வாறு இதய ஆரோக்கியம் நன்றாக இருக்க இதனை செய்து வந்தால் போதும். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் இதய வால்வு அடைப்பு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

இஞ்சி சாறுடன் தேன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் இதய வால்வு அடைப்பு நீங்கும். தினமும் மிக எளிதான உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வது இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வெங்காயத்தில் ரத்தத்தை நீர்மை படுத்தும் குணமும், கொழுப்பைக் குறைக்கும் குணமும் உண்டு. அதனை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. நல்ல சத்தான காய்கறிகள், பழங்கள், கீரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய பிரச்சனை வராது.

Categories

Tech |