தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஸ்டாலின் தெருவில் சுரேஷ் என்ற வெல்டர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவடி ரயில் நிலையத்திற்கு தனது பெற்றோருடன் மின்சார ரயிலில் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது சுரேஷ் டிக்கெட் வாங்கிவிட்டு இரண்டாவது நடைமேடைக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்தபோது, அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் மின்சார ரயில் இவரின் மீது பலமாக மோதி விட்டது.
இதனால் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆவடி ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.