கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் செல்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாடத்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டியன் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து கொண்டிருந்த செல்வமணி சம்பவம் நடைபெற்ற அன்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வமணி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
இவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து செல்வமணியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக செல்வமணி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.