அதிமுக முழுமையாக பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர், பாரதிய ஜனதா கட்சி என்ற ஒரு நச்சு இயக்கத்தை தமிழ்நாட்டில் நுழைய தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். உள் ஒதுக்கீடு என்பது விவாதத்திற்கு உட்பட்டது. ஒதுக்கீடு விவாதத்துக்கு அப்பாற்பட்டது. அந்த விவாதத்தை தொடங்கி வைப்பதற்காக தான் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தன்னுடைய பணியை முடிக்காத நேரத்தில்….
தேர்தல் அறிவுக்கு மூன்று மணி நேரத்துக்கு முன் உள் ஒதுக்கீட்டை அறிவித்தால் மக்கள் மத்தியில கேள்விகள் எழத்தான் செய்யும். அதிமுக முழுக்க முழுக்க பாரதிய ஜனதா கட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரையிலே அடிமை சாசனம் எழுதி குடுத்துட்டாங்க. மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களை விலை கொடுத்து வாங்குவது தான் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை என ப.சிதம்பரம் விமர்சித்தார்.
கோவா, மணிப்பூர், அருணாச்சலப்பிரதேஷ், மத்திய பிரதேஷ் என பல மாநிலங்களிலே அரங்கேறிய நாடகம் தான் புதுச்சேரியிலும் அரங்கேறி உள்ளது. இது பாஜகவின் மூன்றாவது உக்தி… தேர்தலில் வெற்றியும் பெறாமல், தேர்தலில் தோல்வியும் அடையாமல் தேர்தலை திருடி கொள்வது என கடுமையாக விமர்சித்தார்.