பெரம்பலூர் மாவட்டத்தில் மொபட் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேம்பூர் புது காலனியில் பகுதியில் பாண்டியன் மற்றும் தனம்(55) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பரமேஸ்வரி(27), பச்சையம்மாள்(25) ,மற்றும் சக்திவேல்(21) என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் மூத்த மகளான பரமேஸ்வரியை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு செந்நிலா(3),தமிழ்நிலவன்(2) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
அதன் பிறகு தனது இரண்டாவது மகளான பச்சையாம்மாளை கொளப்பாடி பகுதியில் வசித்து வரும் பாண்டியன் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு நந்திதா (2)என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. மேலும் பச்சையம்மாள் கர்ப்பமாக உள்ளார். அவரைப் பார்க்க தனம் ,சக்திவேல் , பரமேஸ்வரி, செந்திலா, தமிழ் நிலவன் ஆகிய 5 பேரும் ஓர் மொபட்டில் வேம்பூரிலிருந்து கொளப்பாடி சென்றனர் .
மேலும் பச்சையம்மாளை பார்த்து நலம் விசாரித்து விட்டுமீண்டும் வேம்பூருக்கு திரும்பிச் சென்றனர் . இந்நிலையில் பச்சையம்மாள் மகளான நந்திதாவும் அவர்களுடன் சென்றுள்ளார். அந்த மொபட்டை சக்திவேல் இயக்க நந்திதா ,மற்றும் செந்நிலா இருவரும் காரின் முன்பகுதியில் நின்று கொண்டிருந்தனர். மற்ற மூன்று பேரும் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் 6 பேரும் வேம்பூரிலிருந்து கள்ளங்காடு என்ற பகுதியை அடைந்தபோது எதிரே வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி மிக வேகமாக அந்த மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து பரமேஸ்வரி, நந்திதா மற்றும் செந்நிலா ஆகிய மூவரும் தூக்கி வீசப்பட்டதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு மூன்று பேரும் படுகாயமடைந்த நிலையில் அவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தனம் உயிரிழந்தார்.
மேலும் 2பேரை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தமிழ் நிலவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த கார் ஓட்டுநர் தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .இந்த விசாரணையில் கார் ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.