திருவண்ணாமலையில் லாரி ஓட்டுநர் டிப்பர் லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள படக்கல்பாக்கம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் சந்திரசேகர் மாமண்டூர் பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின் அவர் மாமண்டூர் சுருட்டல் சாலை வழியாக வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த லாரி ஒன்று சந்திரசேகரன் மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது.
அதில் தூக்கி வீசப்பட்ட சந்திரசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த பகுதியில் தொடர்ந்து விபத்து அதிகரித்துவருவதாக தெரிவித்த சந்திரசேகரனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.