பாமக – அதிமுக தொகுதி பங்கீடு உறுதியானதை தொடர்ந்து மாற்றம், முன்னற்றம், அன்புமணி கைவிடப்பட்டதா ? என்ற கேள்விக்கு அன்புமணி ராமதாஸ் பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக – பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. கடந்த காலங்களில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக களம் கண்டு… மற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. தற்போது அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைந்துள்ளதால், இனி வரும் தமிழக சட்டமன்ற தேர்தல்களில் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற அந்த விஷயம் கைவிடப்பட்டுள்ள தா ? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், தெளிவாக சொல்லி இருக்கிறேன். இந்த தேர்தலைப் பொறுத்தவரை எங்களுக்கு முக்கியமானது எங்களுடைய மருத்துவர் ஐயா அவர்கள் 40 ஆண்டுகாலம் போராடி, பல முறை சிறைக்கு சென்று, பல போராட்டங்கள் நடத்தி, பல தியாகங்கள் செய்து, பல அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து…
இன்று மருத்துவர் அய்யாவுடைய கோரிக்கை முதல் கட்டமாக நிறைவேற்றபட்டு இருக்கிறது. 40 ஆண்டுகால போராட்டத்திற்கு முதல் கட்டமாக ஒரு முடிவு வந்திருக்கிறது. அதனால் இந்த தேர்தலில் நாங்கள் எங்களுடைய எண்ணிக்கையை குறைத்து நாங்கள் பெற்றிருக்கிறோம். ஒரு கூட்டணியாக நிச்சயமாக நாங்கள் மிகப்பெரிய வெற்றியை நங்கள் பெறுவோம் என பதிலளித்தார்.