பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் கிராமத்தில் வசிப்பவர் பாண்டியன். இவருடைய மனைவி தனம் இவர்களுக்கு ஒரு மகனும் மூன்று மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று தனம் தன்னுடைய மகனான சக்திவேல் மற்றும் தன்னுடைய மகளான பரமேஸ்வரி மேலும் அவர்களுடைய குழந்தைகளான செம்மிளா(3), நந்திதா(2), தமிழ்(1) என மொத்தம் ஆறு பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளனர்.
இதையடுத்து இருசக்கரவாகனம் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் இவர்களுடைய இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே பரமேஸ்வரி நந்திதா, செம்மிளா ஆகியோர் நசுங்கி உயிரிழந்துள்ளனர். தனம் மற்றும் சக்திவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர்களில் 1 வயதுடைய தமிழ் என்ற குழந்தை மட்டும் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றது. இதையடுத்து காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பேர் மட்டுமே பயணம் செய்யும் பைக்கில் 6 பேர் பயணம் செய்து பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.