பிரிட்டனில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தையை தூக்கிக்கொண்டு பெற்றோர் பேராபத்துக்களை தரக்கூடிய யோர்க்ஷிர் என்ற இடத்தில் முகாமிட்டு தங்கியுள்ளனர்.
பிரிட்டனில் பல நிலச்சரிவுகளை கண்ட யோர்க்ஷிர் ஸ்டேதஸ்சில் உள்ள ‘கிளீவ்லண்ட் வே ட்ரைல்’ பாதையில் குழந்தையோடு பெற்றோர் பயமில்லாமல் தங்கியுள்ளனர். இந்த காரியத்தை செய்தால் பலரும் சமூக வலைதளங்களில் அவர்களை கண்டித்து வருகின்றனர். அவர்கள் கிட்டத்தட்ட 666 அடி உயர உச்சியில் அவர்கள் முகாமிட்டு இருந்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் அந்த புகை படங்கள் வைரலாகி வருகிறது.
இந்த ஆபத்தான பகுதியில் ஏற்கனவே இருவர் கடந்த வாரம் தங்கியுள்ளனர். அதில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்பதற்காக வந்த ஒருவர் 500 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இந்நிலையில் இந்த பெற்றோர்கள் குழந்தையை கொண்டு அந்த இடத்திற்கு வந்தது மிகப்பெரிய தப்பு என்றும் அவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.