இந்தியாவில் தமிழகத்தில் லாட்டரி சீட்டினால் பலருடைய வாழ்க்கையும் பாழடைந்ததால் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஒருசில மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் இருக்கிறது. லாட்டரி என்பது அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். பஞ்சாப்பை சேர்ந்தவர் ரேணு. இவர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய கணவர் துணி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ரேணு வெறும் 100 ரூபாய்க்கு ஒரு லாட்டரிச் சீட்டு வாங்கியுள்ளார். இதையடுத்து சில நாட்கள் கழித்து அவருக்கு அந்த லாட்டரி எண்ணில் ஒரு கோடி ரூபாய் பரிசு அடித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் தகவல் அளித்த போது, ரேணு அதை கேட்டு அதிகளவில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவள். நடுத்தர குடும்பங்களுக்கு இவ்வளவு பெரிய தொகை என்பது கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாதது. இதைவைத்து தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய போவதாகவும் தெரிவித்துள்ளார். வெறும் 100 ரூபாய்க்கு லாட்டரி சீட்டு வாங்கி ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.