பிரிட்டன் தனியார் நிறுவனமான எக்ஸ்பீரியன்க்கு எதிராக வழக்கு கொடுக்கப்பட்டதில் 750 பவுண்டுகள் பொதுமக்கள் ஒவ்வொருக்கும் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
எக்ஸ்பீரியன் நிறுவனம் ஒரு தகவல் சேவை நிறுவனமாகும். உலகெங்கும் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பகுப்பாய்வு தொடர்பான சேவைகளை உடனுக்குடன் செய்யக்கூடியதாக இருந்துள்ளது .மேலும் 46 மில்லியன் தனிநபர்களின் தரவுகளை இந்த நிறுவனம் சேகரித்ததோடு அதனை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளது. இந்நிலையில் சட்டத்தரணி லிஸ் வில்லியம்ஸ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 750 பவுண்டுகள் இழப்பீடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் .
வழக்கில் வெற்றி பெற்றால் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இருக்கும் சுமார் 46 மில்லியன் மக்களுக்கு தலா 750 பவுண்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். அந்த வழக்கில் அவர் வணிக லாபத்திற்காக பிரித்தானியர்களின் தனிப்பட்ட தரவுகளில் விற்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். நிறுவனம் தனிப்பட்ட தரவுகளை அவர்களின் அனுமதி இல்லாமல் மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்துள்ளதாக அவர்களின் மீது 20 மில்லியன் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுகுறித்து எக்ஸ்பீரியன் நிறுவனம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த வழக்கு தொடர்பாக உரிய பதில் அளிக்கும் என்று எக்ஸ்பீரியன் தெரிவித்ததுடன், இந்த வழக்கிற்கான நியாயமான காரணம் இருப்பதாக தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.