இந்தியாவில் தற்போது பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் கொடூரமான முறையில் அரங்கேறி வருகின்றன. பாலியல் சீண்டலுக்கு ஆளாகுவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகின்றன. மேலும் உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சமீபகாலமாக அதிகரித்து கொண்டு இருக்கிறது. இந்த பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை கடுமையான தண்டனையும் கொடுத்து வருகிறது.
ஆனால் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை கொடுக்கும் காவல்துறை அதிகாரியே பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் என்பவர் காவல் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்ததால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை இன்று 2.15 க்கு சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.
மேலும் காவல்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிக்கே இந்த நிலைமை வந்துவிட்டதே? என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் தாமாகவே முன்வந்து இதை விசாரித்து முக்கிய உத்தரவையும் பிறப்பிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.