Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’… ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்…!!!

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் ரூ.100 கோடி பட்ஜெட்டில்  உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’. குஞ்சலி மரைக்காயரின் வீர வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார் ‌ . இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர் .மேலும் இந்த படத்தில் அசோக் செல்வன், அர்ஜுன், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .

Keerthy Suresh in Marakkar-Arabikadalinte Simham; character poster out |  Mohanlal and Keerthy Suresh in Marakkar

தமிழ் ,ஹிந்தி, மலையாளம் ,தெலுங்கு உள்பட 5 மொழிகளில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் கடந்த வருடம் மார்ச் மாதம் வெளியாக இருந்தது . ஆனால் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இந்த படம் வருகிற மார்ச் 26ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது ‌. அதன்படி இந்த படம் வருகிற மே மாதம் 13ஆம் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது .

Categories

Tech |