Categories
மாநில செய்திகள்

“நல்ல வளம் மிகுந்த தமிழ்நாட்டை நாளை அமைப்போம்”… பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் அழைப்பு..!!

நலம் மிகுந்த தமிழ்நாட்டை நாளை அமைப்போம் என்று மு க ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஒட்டி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் இன்று என்னுடைய பிறந்தநாள். என் உயிருடன் கலந்து இருக்கும் அனைத்து உடன்பிறப்புகளுக்கும் வணக்கம். தமிழ் சமுதாயத்திற்காக நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். அதற்கு அடுத்த ஆண்டு அடியெடுத்து வைக்கிறேன். ஒவ்வொரு மனிதனும் தனது பிறந்த நாளை அவர் கொண்டாடுவதை விட பிறர் கொண்டாடும் வகையில் வாழவேண்டும் என்றுதான் முத்தமிழ் அறிஞர் கூறுகிறார்.

இந்த நாள் பிறந்தநாள் கொண்டாட்டமாக இருக்க வேண்டாம். மக்களுக்கு பயனுள்ள வகையில் இந்த நாள் இருக்க வேண்டும். வெறும் கொண்டாட்டத்திற்காக மட்டும் நாம் பிறந்தநாள் கொண்டாடுவது இல்லை. அடுத்தவருக்கு பயன்தரக் கூடிய ஒருவராக நாம் இருக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு பயன் தரும் வகையில் இந்த நாள் இருக்க வேண்டும். மாணவ மாணவியர்களுக்கு எழுதுபொருட்கள், குறிப்புகளை கொடுங்கள். இலவச மருத்துவ முகாம் நடத்துங்கள்.

கண் தானம் செய்யுங்கள். ரத்த தானம் செய்யுங்கள். இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்கின்றது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும். நாம் நம் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும். மக்கள் நமக்கு வழங்கி இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தமிழக மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைப்போம். கோடிக்கணக்கான மக்களின் மகிழ்ச்சிக்கு காரணமாக நம் அரசு இருக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து நல்ல நலம் மிகுந்த தமிழ் நாட்டை அமைப்போம் வாருங்கள் என்று தனது பிறந்தநாளை முன்னிட்டு அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |