Categories
உலக செய்திகள்

“பிரிட்டனில் பரவிய பிரேசில் வகை கொரோனா”… அதிர வைக்கும் புது தகவல்… பீதியில் பொதுமக்கள்…!!

பிரிட்டனில் வசிக்கும் 6 நபர்களுக்கு பிரேசில் வகை கொரோனா வைரஸ் பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனில் உருமாற்றமடைந்த புதிய வகை  கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பிரிட்டன் அரசாங்கம் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரேசிலில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது பிரிட்டனில் பரவத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் இதுவரை ஆறு நபர்களுக்கு பிரேசில் வகை கொரோனா வைரஸ் பரவியது தெரியவந்துள்ளது. இந்த வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து திரும்பிய பின்பு எந்த ஒரு இடத்திலும் தன்னை பற்றிய விவரங்களை பதிவு செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது.

இதனால் அவரிடமிருந்து பிறருக்கு இந்த புதிய வகை வைரஸ் பரவி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் பிரேசில் வகை வைரஸால் பாதிக்கப்பட்ட மர்ம நபரை கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். தெற்கு க்ளுசெஸ்டர்ஷயர் என்ற பகுதியில் ஒரே வீட்டில் 2 பேருக்கு  இந்த வகை  வைரஸ் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் ஸ்காட்லாந்தில்  வசிக்கும் 3 பேருக்கும் பிரேசில் வகை கொரோனா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |