பிரிட்டனில் தன்னுடைய குடும்பத்துடன் கடற்கரைக்கு சென்ற பெண்மணி கடலோரப் பகுதியில் மிகப்பெரியஉலோக பந்து இருப்பதை கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் மேற்கிந்திய தீவில் உள்ள ஹார்பர் தீவுக்கு மானான் கிளார் என்ற பெண்மணி தன்னுடைய குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் பளபளவென மின்னும் வித்தியாசமான பொருள் ஒன்று இருந்ததை கண்டுள்ளார்.மணலை அகற்றி பார்த்ததில் அது மிகப்பெரிய உலோக பந்து தெரியவந்துள்ளது. ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த உலோகப்பந்தை தனது செல்போனில் படம் பிடித்து வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஒருவேளை இது ராக்கெட்டில் பயன்படுத்தும் உலோக உருளையாக இருக்கலாம். இல்லையெனில் செயற்கைக்கோளில் உள்ள பொருளாக கூட இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.