அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கிலிருந்து நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் விலகியுள்ளார் .இதன் காரணமாக இந்த வழக்கு மார்ச் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு, இடைத்தரகர் சந்திரசேகர் மூலம் டிடிவி தினகரன் பல லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழக்கு தொடரப்பட்டு டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழக்கு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் புதிய திருப்பமாக டெல்லி நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணிய பிரசாத் இதில் இருந்து விலகியுள்ளார். லஞ்சம் தொடர்பாக டெல்லி காவல்துறை தொடுத்த வழக்கின் விசாரணைக்கு தடை கோரிய வழக்கில் இருந்து நீதிபதி விலகியுள்ளார். இதன்காரணமாக இம்மாதம் 25 ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.