Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவுக்கு திருமணம்… வெளியான புதிய தகவல்…!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுல ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா. அவரின் நடிப்பிற்கு மயங்காதவர்கள் யாரும் கிடையாது. அவர் முதலில் வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்பு உடன் காதல் ஏற்பட்டது. அப்போது பல சிக்கல்கள் எழுந்தன. அந்த சிக்கனை தொடர்ந்து நயன்தாரா சிம்புவை பிரிந்து சென்றார். அதன்பிறகு பிரபுதேவா மீது காதல் கொண்டு அவரை மணப்பதற்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினார். ஆனால் அதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டதால் பிரபுதேவா நயன்தாராவை பிரிந்தார்.

இந்நிலையில் இப்படி அடுத்தடுத்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, தற்போது காதலித்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவனை விரைவில் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவர்கள் திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் வெளியான நிலையில், தற்போது மீண்டும் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமன்றி அவர்கள் மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. திருமணம் நடப்பதற்கான ஏற்பாடுகள் ரகசியமாக நடந்து வருவதாக புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இது குறித்து இரு தரப்பிலும் இதுவரை விளக்கம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |