Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல்,டீசல் விலை 100 ரூபாயை தொடபோகுது…கேஸ் விலை 1000 ரூபாயை தொடபோகுது… இப்படியே போனா மக்கள் நிலை..?

பிப்ரவரியில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 100 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் 25 ரூபாய் அதிகரித்து ஒரு சிலிண்டர் 835 ஆக உள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1ம் தேதி, 16 ஆம் தேதி என்று ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்படும். கடந்த ஜனவரி மாதத்தில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் 710 ரூபாயாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் 25 ரூபாய் அதிகரித்து 735 விற்கப்பட்டது. பிறகு 15ஆம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 785 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் 25 ரூபாய் அதிகரித்து 110 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரே மாதத்தில் சிலிண்டர் விலை 100 ரூபாய் அதிகரித்தது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று ரூபாய் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 835 ஆக உள்ளது. பெட்ரோல் டீசல் விலை 100 தொட்டு விடும் நிலையில் உள்ளது. அடுத்ததாக கேஸ் சிலிண்டர் விலை ஆயிரத்தை தொடப் போகிறது. இதனை மக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

Categories

Tech |