துபாயில் தெருவில் ஒருவர் பணத்தை வீசிய வீடியோ வைரலான நிலையில் தற்போது அது போலியான யூரோ என்று தெரியவந்துள்ளது.
துபாயில் ஐரோப்பிய தொழிலதிபர் என்று தன்னை காட்டிக் கொள்ள தெருவில் பணத்தை வீசியபடி வெளியிட்ட வீடியோ வைரலானதை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் வீசிய யூரோக்கள் போலியானது என்பது தெரியவந்தது. மேலும் இந்த போலி யூரோக்களை வாங்க 1000 டாலர் கொடுத்து ஆசியரிடம் வாங்கியுள்ளார் .இதற்கான காரணம் என்னவென்றால் தன்னை அதிகம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்பற்ற வேண்டும் என்பதற்காக இந்த செயலை செய்ததாக தெரியவருகிறது.
துபாய் நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தியதில் அவர் தான் ஒரு பணக்கார வாழ்க்கை வாழ்கிறதை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக இப்படி செய்தேன் என்று குற்றத்தை ஒப்புக்கொண்டார் .ஆனால் நீதிமன்றம் அவருக்கு 200000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த நபரின் வீட்டிலிருந்து 40,000 போலி அமெரிக்க டாலர்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.