கேரளா கட்சி பேரணியில் நடைபெற்ற மோதலில் ஆர்எஸ்எஸ் கட்சியின் தொண்டர் நந்து கிருஷ்ணன் பலியாகியுள்ளார்.
கேரள மாநிலத்தில் அவ்வபோது அரசியல் கட்சியினர் இடையே மோதல்கள் ஏற்படுவது வழக்கம். இந்த மோதலின் போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வர். அதன்படி தற்போது கேரளாவில் நடைபெற்ற கட்சி மோதலில் ஆர்எஸ்எஸ் தொண்டர் நந்து கிருஷ்ணன் (22 வயது) என்ற இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். கேரளாவில் மாநில பாஜக சார்பில் காசர்கோடிலிருந்து திருவனந்தபுரம் வரை விஜய் யாத்திரை நடைபெற்றுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் பேரணி நடத்தியுள்ளனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் உருவாகி இருக்கின்றது. அந்த மோதலில் ஆர்எஸ்எஸ் கட்சி தொண்டர் நந்து கிருஷ்ணன் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலையை கண்டித்து ஆலப்புழா மாவட்டத்தில் முழு கடையடைப்பு நடைபெற்றுள்ளது. அந்நேரத்தில் ஆர்எஸ்எஸ் கட்சியினர் சேர்த்தலா பகுதியில் எஸ்டிபிஐ அமைப்பினருக்கு சொந்தமான கடைகள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து அம்மாவட்ட கலெக்டர் அடுத்த 3 நாட்களுக்கு ஆலப்புழா பகுதி முழுவதும் 144 தடை உத்தரவை தெரிவித்துள்ளார்..