நிதி நிலைமை மோசம் காரணமாக பல தனியார் வங்கிகளை அரசு வங்கிகளுடன் இணைக்கும் பணியை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. அதன்படி சில வங்கிகளுடைய இணைப்பும் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் விஜயா மற்றும் தேனா வங்கி பேங்க் ஆப்பரோடா வங்கியுடன் ரிசர்வ் வங்கி இணைத்துள்ளது. இதனால் அந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பேங்க் ஆஃப் பரோடா வங்கி கணக்கில் உள்ள பழைய ஐஎஃப்எஸ்சி குறியீடு இனி இயங்காது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் விஜயா மற்றும் தேனா வங்கி, பரோடா வங்கி வாடிக்கையாளர்கள் பேங்க் ஆப் பரோடா வங்கிகளில் தங்களுடைய தேவையான ஆவணங்களைக் கொடுத்து புதிய ஐஎஃப்எஸ்சி குறியீடு களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களை www.bankofbaroda.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.