இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததால் இந்தியா பிச்சுகள் மோசமானது என முன்னாள் வீரர்கள் குறை கூறி வருகின்றனர் .
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையே நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் சென்னை மற்றும் அகமதாபாத் பிட்சுகள் மோசமானதாக இருந்ததாகவும். அதுவே இந்திய அணிக்கு சாதகமாக அமைந்ததால் இந்திய அணி வெற்றி பெற்றதாகவும் இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன், டேவிட் லாயட் போன்ற வீரர்கள் கூறியுள்ளனர்.
தற்போது நடக்க இருக்கும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடத்தப்படுவதால் அந்த போட்டியிலும் பிட்சுகள் பற்றி தொடர்ந்து குறை கூறி வருகின்றனர். இது போன்றே தொடர்ந்து இந்திய மைதானம் பற்றி குறைகள் அதிகமாகி வரும் நிலையில் ஆப்கானிஸ்தானை சார்ந்த நாதன் லயன் என்ற வீரர் ஆதரவு அளித்துள்ளார்.
இது குறித்து நாதன் டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். மிகவும் அழகாக நடத்தப்பட்டுள்ளது. இதில் எந்த தவறும் தெரியவில்லை. ஒரு சில நேரங்களில் பந்துகள் நன்கு சுழல்வதை கண்டு அதுபற்றி மக்கள் குறை கூறிக் கொண்டே வருவார்கள். இது போன்ற போட்டிகளை ஆஸ்திரேலியாவும் சந்தித்துள்ளது இதனால் 47 மற்றும் 60 ரன்களில் கூட ஆல் அவுட் ஆகியுள்ளோம். அப்போது எந்த எதிர்ப்பும் வரவில்லை. ஆனால் தற்போது பிட்சுகள் பற்றி ஏன் இவ்வளவு குறை கருத்துகள் வெளிவருகிறது என நாதன் லயன் தெரிவித்துள்ளார்.