மனைவியை பிரித்த சாமியாரை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஆலப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் திருமலை என்பவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார் .அந்தப் பகுதியில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் 56 வயதான ராஜேந்திரன் என்பவர் அருள்வாக்கு சொல்லி வந்தார்.அவர் அப்பகுதியில் வசிக்கும் பக்தர்களின் நம்பிக்கையை பெற்று வந்தார். கோயிலுக்கு வரும் பலரும் அருள்வாக்கில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து திருமலை தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் கடுமையாக சண்டையிடுவார் என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருமலையின் மனைவி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார் எனவும் அதன் பிறகு அவர் வீடு திரும்பவே இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத திருமலை தனது மனைவியின் மாற்றத்திற்கு காரணம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அருள்வாக்கு சொல்லும் ராஜேந்திரன் என யாரோ ஒருவர் திருமலையிடம் கூறியதாக கூறப்படுகிறது.
இதனை கேட்ட திருமலை அருள்வாக்கு சொல்லும் ராஜேந்திரனை தேடி சென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். அங்கிருந்த பக்தர்கள் ராஜேந்திரனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .இது தொடர்பாக திருமலை மீது வழக்குப்பதிவு செய்து தற்போது கைது செய்து சிறையில் அடைத்தனர் .இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.