Categories
உலக செய்திகள்

அம்மாடியோ… இவ்வளவு எடை கொண்ட வெடிகுண்டா?… பீதியை கிளப்பும் பயங்கர காட்சி…!!

இங்கிலாந்தில் ஆயிரம் கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறிய காட்சி பீதியை கிளப்பியுள்ளது.

இங்கிலாந்தில் exeter  என்ற இடத்தில் பல்கலைக்கழகம் மற்றும் முதியோர் இல்லம் அமைந்துள்ளது. அந்த இடத்திற்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கட்டுமான பணிக்காக பணியாளர்கள் பள்ளம் தோண்டி கொண்டிருந்த நிலையில்  திடீரென 8 அடி நீளமும் சுமார் 1000 கிலோ எடையுடைய பிரம்மாண்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அதிர்ச்சி அடைந்து கட்டுமானப் பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வெடிகுண்டால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்களை அவசரஅவசரமாக வேறு பகுதிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இந்த ராட்சச வெடிகுண்டை எவ்வாறு செயலிழக்கச் செய்வது என்று நிபுணர்கள் திட்டமிட்டு கொண்டிருந்தனர். பிறகு மறுநாள் மாலை 6 10 மணிக்கு கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பெரிய வெடிகுண்டை வெடிக்க செய்து  செயலிழக்கச் செய்தனர். மேலும்  வெடிகுண்டு வெடித்து சிதறும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்தக் காட்சி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வெடிகுண்டு பிடித்திருந்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வெடிகுண்டு நிபுணர்களால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் வெடிக்க செய்தாலும் அதன் சத்தம் 6 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டுள்ளதாகவும்  மேலும் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வெடிகுண்டு அபாயம் நீங்கி விட்டதா என்பதை உடனடியாக முடிவெடுக்க முடியாததால் மக்கள் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்ப இயலாது என்றும் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுமாறு மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |