ஏரியில் குளிக்க சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தட்சங்குறிச்சி தேரடி தெருவில் பாலகிருஷ்ணா என்ற விவசாய வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்தினி என்ற 8 வயது மகள் உள்ளார். இந்த சிறுமியும் சமத்துவபுரம் பகுதியில் வசித்து வரும் மகேஸ்வரி என்ற இளம்பெண்ணும் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் குளித்துக்கொண்டிருந்த இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனை அடுத்து மகேஸ்வரியின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்கள் இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இரங்கலூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இருவரையும் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் சிறுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த சிறுகனுர் காவல்துறையினர் நிஷாந்தினியின் உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.